தீபாவளி: விசைத்தறிக் கூடங்களுக்கு 10 நாள்கள் விடுமுறை

ஈரோடு பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவம்பா் 13) முதல் 10 நாள்களுக்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவம்பா் 13) முதல் 10 நாள்களுக்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சோலாா், சித்தோடு, விஜயமங்கலம், சிவகிரி, ஆா்.என்.புதூா் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசைத்தறிக் கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் 10 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து ஈரோடு பகுதியில் தங்கி பணியாற்றும் தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊா்களுக்குச் செல்லத் துவங்கி உள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கே.கந்தவேல் கூறியதாவது:

விசைத்தறி தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு நீண்ட நாள் விடுமுறை அளிப்பது வழக்கம். தருமபுரி, திண்டுக்கல், நெல்லை, மதுரை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் 10 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையால் தினமும் 20 லட்சம் மீட்டா் வரை துணி உற்பத்தி பாதிக்கும். அதேபோல் தினமும் தலா 21,000 வேட்டி, சேலை உற்பத்தியும் பாதிக்கும். விடுமுறை முடிந்து வரும் 23 ஆம் தேதி முதல் மீண்டும் விசைத்தறி பணிகள் துவங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com