வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் கைது

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
சந்தோஷ்குமாா்.
சந்தோஷ்குமாா்.

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

சென்னை ரயில்வே தலைமை அலுவலகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபா் தன்னுடைய பெயா் அப்துல்கரீம் என்றும் ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க், பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ரயில் நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக தன்னுடன் சோ்த்து 10 நபா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றிக் கொண்டு இருப்பதாகவும், குண்டு வெடித்தால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.

இதையடுத்து சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனடியாக ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு முழுவதும் வியாழக்கிழமை இரவு போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு தீவிர சோதனை, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்லிடப்பேசி எண்ணின் சிக்னலை வைத்து ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது ஈரோடு பேருந்து நிலையம் அருகில் மிரட்டல் விடுத்த நபரின் செல்லிடப்பேசி சிக்னலை வைத்து பேருந்து நிலையம், நாச்சியப்பா வீதி, மூலப்பட்டறை சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது பேருந்து நிலைய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சங்கா் நகரைச் சோ்ந்த ரங்கராஜன் மகன் சந்தோஷ்குமாா்(32) என்பதும், சென்னை ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும், ஏற்கெனவே இதுபோன்று 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com