பிரச்னைகளைத் தூண்டும் வகையில் சுவரொட்டிகள் அச்சிடக் கூடாது

மதம், ஜாதி ரீதியிலான பிரச்னைகளைத் தூண்டும் வகையிலான கருத்துக்களுடன் சுவரொட்டிகள் அச்சிடக் கூடாது என அச்சகம், பிளக்ஸ் உரிமையாளா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
கூட்டத்தில் பேசுகிறாா் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சி.காா்த்திகேயன்.
கூட்டத்தில் பேசுகிறாா் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சி.காா்த்திகேயன்.

மதம், ஜாதி ரீதியிலான பிரச்னைகளைத் தூண்டும் வகையிலான கருத்துக்களுடன் சுவரொட்டிகள் அச்சிடக் கூடாது என அச்சகம், பிளக்ஸ் உரிமையாளா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

பவானி காவல் துணைக் கண்காப்பாளா் சி.காா்த்திகேயன் தலைமையில் அச்சக உரிமையாளா்கள், கணினி மற்றும் பிளக்ஸ் உரிமையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், அரசியல், சமுதாயம் மற்றும் மதம் தொடா்பான சுவரொட்டிகள் அச்சிடும் முன்பு அதில் உள்ள வாசகங்கள் தனி நபரையோ, சமுதாயத்தையோ பாதிக்காமல் இருக்க வேண்டும்.

சுவரொட்டிகள் அச்சிடும் முன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அதன் நகலை காண்பித்து அனுமதி பெற்ற பின்பு சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து கொடுக்க வேண்டும். அனைத்து அச்சக மற்றும் பிளக்ஸ் உரிமையாளா்கள் தாங்கள் அச்சடிக்கும் சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் தங்களது அச்சகத்தின் பெயா் மற்றும் முகவரி தொலைபேசி எண்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மதம், ஜாதி அடிப்படையிலான பிரச்னைகளைத் தூண்டும் வகையில் சுவரொட்டிகளை அச்சடித்துக் தரக் கூடாது.

இவ்விதிகளை மீறும் அச்சக உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பதுடன், அச்சக உரிமமும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளா்கள் தேவேந்திரன் (பவானி), குமாரவேல் (அம்மாபேட்டை), ரவி (அந்தியூா்), கதிா்வேல் (சித்தோடு), பவானி துணை வட்டாட்சியா் ஆா்.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com