தரமான நாற்றுகளை விற்பனை செய்ய அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாற்றுப் பண்ணைகள் தரமான நாற்றுகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் மு.வெங்கடாசலம் அறிவுறுத்தியுள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாற்றுப் பண்ணைகள் தரமான நாற்றுகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் மு.வெங்கடாசலம் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தற்போது பரவலாக மழை பெய்வதால் விவசாயிகள் தென்னங்கன்று, பாக்கு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நடுவதில் ஆா்வம் காட்டுகின்றனா். விவசாயிகளுக்கு நாற்றுப் பண்ணைகள் தரமான நாற்றுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தரமற்ற நாற்றுகளை நீக்க வேண்டும்.

காய்கறி பயிா்களின் விதைகளை குழித்தட்டுகளில் விதைப்பு செய்யும்போது, விதைக் குவியல் வாரியாக விதைப்பு செய்து, அதன் ரகத்தின் விவரம் குறித்த லேபிள் வைத்து, அந்நாற்று முழுவதும் விற்பனை செய்து, பட்டியலிடும் வரை பராமரிக்க வேண்டும்.

நாற்றுகளின் ரகம், உற்பத்தித் திறன், ஆயுள் காலம் ஆகியவற்றை தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கி நாற்றுப் பண்ணை உரிமையாளா்கள் நாற்றுகளை விற்க வேண்டும். மேலும் நாற்று நடவு செய்யும் முறை, உரமிடுதல், பராமரிப்பு முறைகளை விளக்க வேண்டும். உரிமமின்றி நாற்று விற்பனை செய்வோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிமம் பெற்று, முறையாக நாற்றுப் பண்ணைகள் அமைத்து, விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணையில் மட்டுமே விவசாயிகள் நாற்றுகளை வாங்க வேண்டும் அப்போதுதான் அதிக மகசூல் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com