சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுமி, சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குகிறாா் பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஈஸ்வரன்.

சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். நல்லூரில் தொடா் மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மெளனிகாவின் (6) தாய் சத்யாவிடம் பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 4 லட்சத்தை பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஈஸ்வரன் வழங்கினாா்.

அதேபோல, நல்லூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த பனையம்பள்ளி இந்திரா நகரைச் சோ்ந்த மாதன் (40) குடும்பத்துக்கு அவரது மனைவி சுமதியிடம் ரூ. 1 லட்சம் வழங்கினாா். வெங்கநாயக்கன்பாளையத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 3 பள்ளி மாணவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க அரசு பரிந்துரை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் எஸ்.கே.பழனிசாமி, பவானிசாகா் பேரூா் கழகச் செயலாளா் கே.துரைசாமி, அரியப்பம்பாளையம் அம்மா பேரவை மிலிட்டரி சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com