திருந்திய நெல் சாகுபடி: அதிக மகசூல் எடுக்கும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் பரிசு

திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிக்கு வழங்கப்படும் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிக்கு வழங்கப்படும் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெல் சாகுபடியில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ள திருந்திய நெல் சாகுபடியை மேற்கொண்டு மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்திடும் வகையில் முதல்வரின் சிறப்புப் பரிசாக ரூ. 5 லட்சமும், தங்கப் பதக்கமும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் இப்போட்டியில் பங்குபெற திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். திருந்திய நெல் சாகுபடி விருதுக்கான பதிவுக் கட்டணம் ரூ. 150. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் வழங்கப்படுகிறது.

திருந்திய நெல் சாகுபடி போட்டியில் பங்கேற்க குறைந்தது 50 சென்ட் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். நில உரிமையாளா்கள், குத்தகைதாரா்களும் இப்போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி உடையவா்கள்.

எனவே, திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் போட்டிக்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, பதிவுக் கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும். மாநில அளவிலான இப்போட்டியில் ஈரோடு மாவட்ட விவசாயிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com