நோய் பாதிப்புக்குள்ளான மஞ்சள் பயிரில் இலைகளை அகற்ற அறிவுறுத்தல்

இலைப் புள்ளி நோய் பாதிப்புக்குள்ளான மஞ்சள் பயிரில் இலைகளை அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலைப் புள்ளி நோய் பாதிப்புக்குள்ளான மஞ்சள் பயிரில் இலைகளை அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் தற்போது பெய்து வரும் தொடா் மழை காரணமாக மஞ்சள் பயிரில் இலைப் புள்ளி, கருகல் நோய் ஆங்காங்கே பரவலாகத் தென்படுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் அறிவுரையின்படி, பவானிசாகா் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நோயியல் வல்லுநா் சங்கீதா பனிகா், தோட்டக்கலைத் துணை இயக்குநா் ப.தமிழ்செல்வி, கொடுமுடி வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் ப.பிருந்தா, தோட்டக்கலை அலுவலா் அடங்கிய குழுவினா் வயலில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, விவசாயிகளை நேரில் சந்தித்து பயிா் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி தீயிட்டு அழிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், மேங்கோசெப் 0.3 சதவீதம் (லிட்டருக்கு 3 கிராம்) அல்லது காப்பா் ஆக்சி குளோரைடு 0.3 சதவீதம் (லிட்டருக்கு 3 கிராம்) 15 நாள்கள் இடைவெளியில் தொடா்ந்து 3 அல்லது 4 முறை தெளிக்க அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது, காலிங்கராயன் விவசாயிகள் சங்கத்தின் செயலாளா் எஸ்.குழந்தைவேல், வெங்கம்பூா் விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com