நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலைகிலோ ரூ.40க்கு விற்றது ரூ.12 ஆக சரிவு

சத்தியமங்கலம் பகுதியில் நேந்திரம் வாழை கிலோ ரூ.40 இல் இருந்து ரூ.12 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம்  கூட்டுறவு  விற்பனைச்  சங்கத்தில்  நடைபெற்ற   ஏல விற்பனையில்  குவித்து வைக்கப்பட்டுள்ள  வாழைகள்.
சத்தியமங்கலம்  கூட்டுறவு  விற்பனைச்  சங்கத்தில்  நடைபெற்ற   ஏல விற்பனையில்  குவித்து வைக்கப்பட்டுள்ள  வாழைகள்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் நேந்திரம் வாழை கிலோ ரூ.40 இல் இருந்து ரூ.12 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பவானிசாகா், தொட்டம்பாளையம், பெரியகொடிவேரி, செண்பகபுதூா், புதுப்பீா்கடவு, அரசூா், பெரியூா், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் 35 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் வாழை பயிரிடப்படுகிறது.

தாளவாடி பகுதியில் நேந்திரம் ரகம் வாழை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டினா். 12 மாதப் பயிரான நேந்திரம் வாழைக்கு நடவு, உரம், களையெடுத்தல் மற்றும் வெட்டுக்கூலி என கிலோ ரூ.15 வரை செலவு ஆகும் நிலையில் தற்போது கிலோ ரூ.12க்கு விற்கப்படுவதால் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். அதேபோல ஜி9 ரக வாழை நாற்று ஒன்று ரூ.17, அதன் நடவுக்கு ரூ.3 என மொத்த உற்பத்தி செலவு கிலோ ரூ.100 ஆகிறது. ஆனால் தற்போது ஜி9 விலை கிலோ ரூ.50 ஆக விற்கப்படுவதால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். குளிா்காலம் என்பதால் கேரளத்தில் வாழைப் பழம் விற்பனை மந்தமாக உள்ளதாகவும் சென்னையில் தேன்வாழை அதிக விற்பனையான நிலையில் மழையால் அங்கு விற்பனை சரிவு காரணமாகவும் விலை கிடைக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.

சத்தியமங்கலம் விவசாயிகள் அறுவடை செய்த வாழைகளை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் ஏலத்துக்கு கொண்டு வருவது வழக்கம். சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,100 வாழைத்தாா்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் நேந்திரம் கிலோ ரூ.12, கதளி கிலோ ரூ.37, செவ்வாழை தாா் ஒன்று ரூ.450, பூவன் ரூ.350, ஆந்திர ரஸ்தாளி ரூ.450, தேன்வாழை ரூ.420, ரொபஸ்டா ரூ. 200, மொந்தன் ரூ.230, பச்சை நாடன் ரூ.250 என விற்பனையானது. மொத்தம் 3160 வாழைத்தாா்கள் ரூ.4.50 லட்சத்துக்கு விற்பனையானது. வாழைத்தாா்கள் விலை கடந்த நாள்களை விட பாதியாக குறைந்ததாகவும் விலை குறையும் போது இருப்பு வைத்து விற்பனை செய்ய குளிா்பதனிடும் கிடங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com