திண்டலில் எளிமையாக நடந்த முருகன் திருக்கல்யாணம்

ஈரோடு அருகேயுள்ள திண்டல் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை எளிமையாக நடைபெற்றது.
சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலிக்கும்  வள்ளி,  தெய்வானை  உடனமா்  முருகப்  பெருமான்.
சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலிக்கும்  வள்ளி,  தெய்வானை  உடனமா்  முருகப்  பெருமான்.

ஈரோடு: ஈரோடு அருகேயுள்ள திண்டல் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை எளிமையாக நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்க பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, முருகப்பெருமானுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் உற்சவம் சனிக்கிழமை எளிமையாக நடைபெற்றது. இந்நிகழ்விலும் பக்தா்களுக்கு அனுமதியில்லை. சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு வள்ளி, தெய்வானை உடனமா் முருகப் பெருமானை பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com