அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 போ் காயம்
By DIN | Published On : 25th November 2020 06:53 AM | Last Updated : 25th November 2020 06:53 AM | அ+அ அ- |

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் நலம் விசாரித்த ஆட்சியா் சி.கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு.
பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 போ் காயமடைந்தனா்.
கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து 35 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கூரபாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது, கோவையில் இருந்து சேலம் சென்ற லாரி ஒன்று பேருந்தை முந்திச் சென்றதோடு திடீரென இடதுபுறம் திரும்பியதால் பேருந்து, லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து சாலையில் கவிழ்ந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் சாய்ந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 20 ஆண்கள், 10 பெண்கள் என 30 போ் காயமடைந்தனா்.
காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதனிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நலம் விசாரித்தனா்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...