ரூ. 13.72 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் ரூ. 13.72 லட்சத்துக்கு புதன்கிழமை நடைபெற்றது.

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் ரூ. 13.72 லட்சத்துக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு விற்பனைக்கு வந்த தேங்காய்களில் சிறியவை ரூ. 6.20 முதல் பெரியவை ரூ. 28.10 வரையில் என ரூ. 29,781க்கு ஏலம் போனது. 14 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 90.89 முதல் ரூ. 120.89 வரையில் என ரூ. 18,454க்கும், 79 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 12 முதல் ரூ. 20.07 வரையில் என ரூ. 1,06,325க்கும், 630 மூட்டைகள் நிலக்கடலைக்காய் கிலோ ரூ. 46.42 முதல் ரூ. 53.53 வரையில் என ரூ. 10,91,841க்கும் விற்பனையானது.

19 மூட்டைகள் எள் கிலோ ரூ. 82.19 முதல் ரூ. 96.39 வரையில் என ரூ. 87,437க்கும், 37 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 13.79 முதல் ரூ. 14.21 வரையில் என ரூ. 38,525க்கும் விற்பனையானது. மொத்தம் 779 மூட்டைகள் 339.38 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 13,72,363க்கு ஏலம் போனது.

இதில், பூதப்பாடி, சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 187 விவசாயிகள் பயனடைந்தனா் என விற்பனைக்கூட கண்காணிப்பாளா் க.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com