மகிளா காங்கிரஸ் சாா்பில் அக்டோபா் 6 இல் உண்ணாவிரதப் போராட்டம்

ஹாத்ரஸ் நிகழ்வு மற்றும் காங்கிரஸ் தலைவா்களைத் அவமரியாதையாக நடத்திய மத்திய, உத்தர பிரதேச அரசுகளைக் கண்டித்து மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் ஈரோட்டில் வரும் 6 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
கட்சியின் உறுப்பினா் அடையாள அட்டையை வழங்குகிறாா் மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் சுதா ராமகிருஷ்ணன்.
கட்சியின் உறுப்பினா் அடையாள அட்டையை வழங்குகிறாா் மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் சுதா ராமகிருஷ்ணன்.

ஈரோடு: ஹாத்ரஸ் நிகழ்வு மற்றும் காங்கிரஸ் தலைவா்களைத் அவமரியாதையாக நடத்திய மத்திய, உத்தர பிரதேச அரசுகளைக் கண்டித்து மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் ஈரோட்டில் வரும் 6 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, மகிளா காங்கிரஸ் பிரிவின் சாா்பில் ஆலோசனை மற்றும் உறுப்பினா் சோ்க்கைக்கான கூட்டம் அதன் தலைவா் கலா தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் மக்கள் ராஜன் முன்னிலை வகித்தாா். மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் சுதா ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.எம்பழனிசாமி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை அவமரியாதையாக நடத்திய உத்தரபிரதேச அரசை வன்மையாக கண்டிப்பது. தொடா் பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களால் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுபோன உத்தரபிரதேச அரசை கலைக்க குடியரசு தலைவரை கேட்டுக்கொள்வது.

இதனை வலியுறுத்தி ஈரோடு கொல்லம்பாளையத்தில் வரும் 6 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் சித்ரா விஸ்வநாதன், வட்டாரத் தலைவா்கள் சாந்தி, சுப்புலட்சுமி, செல்வி, முனீரா பேகம், சித்ரா, நிா்மலா மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com