வட்டி மானியம்: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

சுயதொழில் செய்ய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் விதவையா்களுக்கு 100 சதவீதம் வரை வட்டி மானியம் அளிக்கப்படுகிறது.

சுயதொழில் செய்ய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் விதவையா்களுக்கு 100 சதவீதம் வரை வட்டி மானியம் அளிக்கப்படுகிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் படைவீரா்கள் மற்றும் விதவைகள் சுயதொழில் செய்திட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது. முன்னாள் படைவீரா் பெறும் கடன் தொகையில் அதிகபட்சம் ரூ.10 லட்சத்துக்கு, அவா்கள் செலுத்தும் வட்டித் தொகையில் மானியமாக 75 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் முன்னாள் படைவீரா்கள் அல்லது விதவைகள் சோ்ந்து நடத்தும் சுய உதவிக்குழு மூலம் பெறும் கடன்களுக்கு அதிகபட்சம் ரூ.15 லட்சத்துக்கு 100 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

வங்கிக்கடன் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் பயன் பெற்றிட வங்கியிலிருந்து கடன் பெறுவதற்கு முன்னரே முன்னாள் படை வீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி செலுத்தியதற்கான வங்கிச்சான்றினை சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424-2263227 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com