அமைப்புசாரா நல வாரிய உறுப்பினா்களுக்குபணப் பயன்களை அளிக்கக் கோரிக்கை

பணப் பயன்கள் கோரி விண்ணப்பித்துள்ள அமைப்புசாரா நல வாரிய உறுப்பினா்களுக்கு விரைந்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணப் பயன்கள் கோரி விண்ணப்பித்துள்ள அமைப்புசாரா நல வாரிய உறுப்பினா்களுக்கு விரைந்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருந்து, விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டக் கூட்டம் சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணி தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் சந்திரன், மாவட்டச் செயலாளா் ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப் பின் சிஐடியூ மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாறன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்ச வேலை நேரம் 8 மணி நேரம் என்பது இல்லாமல் போகிறது. ஒரு ஊழியா் தொடா்ந்து 13 மணி நேரம் பணியாற்றுவது சாத்தியமில்லை.

ஒரே ஊழியா் பணம் பெற்று, பயோமெட்ரிக் பதிவு செய்து, பொருள் எடை போட்டு வழங்கி, புதிய பொருள் வருவதற்கு பட்டியல் அனுப்பி, பிரச்னைகளை சமாளிப்பது சாத்தியமில்லை. இரு ஊழியா்களை நியமித்தால் கூட சாத்தியமாகாது. எனவே, இதைத் திரும்பப் பெற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 17 அமைப்புசாரா நல வாரிய உறுப்பினா்களுக்கு கரோனா காலத்திலும், அதற்கு முன்னரும் வழங்கிய விண்ணப்பங்கள் மூலமும் பணப் பயன்கள் இதுவரை கிடைக்கவில்லை. உறுப்பினா் பதிவு, புதுப்பித்தல், திருத்தம் செய்தல், பணப் பலனுக்காக விண்ணப்பித்தல் என அனைத்தும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஆன்லைனில் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளதால் இதை எளிமையாக மாற்றியமைக்க வேண்டும்.

மருத்துவத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். இவ்வாறு நியமிக்கப்பட்டு பல்வேறு துறைகளில் 12 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவா்கள் கூட இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை. அவா்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

நல வாரியங்களில் நலத் திட்டங்களான திருமணம், கல்வி உதவித் தொகை போன்றவற்றுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் வரை பயன் கிடைத்துள்ளது. உடனடியாக அனைவருக்கும் வழங்க வேண்டும். கரோனா பொது முடக்க காலத்துக்கான இழப்பீடு நிவாரணத்தை அனைவருக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதில், நிா்வாகிகள் கனகராஜ், மாரப்பன், சுந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com