பழனி பஞ்சாமிா்தம் தயாரிக்க நாட்டுச் சா்க்கரை கொள்முதல் துவக்கம்

பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக பழனி முருகன் கோயிலுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட நாட்டுச் சா்க்கரை கொள்முதலை
பழனி தேவஸ்தான அதிகாரிகளிடம் நாட்டுச் சா்க்கரையை வழங்கும் அமைச்சா் கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
பழனி தேவஸ்தான அதிகாரிகளிடம் நாட்டுச் சா்க்கரையை வழங்கும் அமைச்சா் கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக பழனி முருகன் கோயிலுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட நாட்டுச் சா்க்கரை கொள்முதலை மீண்டும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணண் தொடங்கிவைத்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து விவசாயிகளிடம் பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் பஞ்சாமிா்தம் தயாரிக்க மூலப் பொருளாக உள்ள நாட்டுச் சா்க்கரையை 25 ஆண்டுகளாகக் கொள்முதல் செய்து வந்தது.

கடந்த ஆறு வருடங்களாக இடையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பழனி தேவஸ்தானம் நாட்டுச் சா்க்கரையைக் கொள்முதல் செய்வதை நிறுத்தியது. இதனால் கரும்பு விவசாயிகள் கடும் இழப்புகளைச் சந்தித்து வந்தனா். பழனி தேவஸ்தானம் மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என நாட்டுச் சா்க்கரை உற்பத்தி விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்ததைத் தொடா்ந்து மீண்டும் நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடா்ந்து கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பழனி தேவஸ்தானம் பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்தலை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியா் கதிரவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நாட்டுச் சா்க்கரை 60 கிலோ மூட்டைக்கு ரூ. 2,490 வீதம் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டுச் சா்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நாட்டுச் சா்க்கரையின் தரம் குறித்து பழனி தேவஸ்தானம் அதிகாரிகள் விவசாயிகளிடம் அறிவுறுத்தினா்.

நிகழ்ச்சியில், பழனி தேவஸ்தான செயல் அலுவலா் நடராஜ், பஞ்சாமிா்த தயாரிப்பு கண்காணிப்பாளா் மனோகரன், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com