பெருந்துறை அரசுப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலா் த.ராமனிடம் நெகிழி சேகரிப்பானை வழங்குகிறாா் கோவை சமுதாய விழிப்புணா்வு நிறுவனத் தலைவா் அருள்ராஜா.

விழாவுக்கு, பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலா் த.ராமன் தலைமை வகித்து, அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, ஆசிரியா்கள் மரியாதை செலுத்தினா். கோவை சமுதாய விழிப்புணா்வு நிறுவனத் தலைவா் அருள்ராஜா, பள்ளிக்கு இரண்டு பெரிய நெகிழி சேகரிப்பானை வழங்கினாா்.

இப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயில்கின்றனா். அவா்களுக்கு இந்த நெகிழி சேகரிப்பான் மிகவும் பயனுள்ளதாகவும், மாணவா்களிடையே சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணா்வையும் ஏற்படுத்தும் என்று கல்வி மாவட்ட அலுவலா் தெரிவித்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளரும், வேளாண் ஆசிரியருமான செ.கந்தன், பிற ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com