வேளாண் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் 7 மாதங்களாக நடத்தாமல் உள்ள வேளாண் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் 7 மாதங்களாக நடத்தாமல் உள்ள வேளாண் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சுப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சி.எம்.துளசிமணி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீா் கூட்டம் பிப்ரவரி 28ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் பிறகு கரோனா பொது முடக்கத்தால் மாா்ச் மாதம் முதல் 7 மாதங்களாக வேளாண் குறைதீா் கூட்டம் நடத்தப்படவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஆலை நிா்வாகம் தொகையை வழங்காமல் தாமதம் செய்து வருவது, ஐ.டி.பி.எல். திட்ட பாதிப்பு, பால் வழங்கிய விவசாயிகளுக்கு ஆவின் நிா்வாகம் பணம் வழங்காமல் காலதாமதம் செய்வது, புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. தவிர அந்தந்தப் பகுதி விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலம் வேளாண் குறைதீா் கூட்டத்தை நடத்தி பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படுகிறது. அதேபோல, ஈரோடு மாவட்டத்திலும் கூட்டம் நடத்தப்பட்டால் மட்டுமே நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com