5 கோடி பனை விதைகள்விதைப்புத் திட்டம் துவக்கம்

தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் கோபி அருகே உள்ள ஓடக்கரையில் திங்கள்கிழமை துவங்கப்பட்டது.
பனை விதைகளை நடுகிறாா் அமைச்சா் கே.சி.கருப்பணன்.
பனை விதைகளை நடுகிறாா் அமைச்சா் கே.சி.கருப்பணன்.

கோபி: தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் கோபி அருகே உள்ள ஓடக்கரையில் திங்கள்கிழமை துவங்கப்பட்டது.

கவுந்தப்பாடி ஜெயம் பிராணி நல அறக்கட்டளை இயக்கம், பனை விதைப்பு இயக்கம், உழவு மரவு வழிப் பண்ணையம், பல்வேறு அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை விதைப்பதற்காகத் திட்டமிட்டுள்ளனா்.

இதன் துவக்க விழா முதல்கட்டமாக ஓடத்துறை ஏரிக்கரையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் பனை விதைகள் விதைக்கும் பணியைத் துவக்கிவைத்தாா்.

இதில், ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரும், இந்து அறநிலையத் துறை ஆணையருமான எஸ்.பிரபாகரன் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com