அந்தியூா் அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை

அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்துவதற்கான கருத்துக் கேட்பு, ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்துவதற்கான கருத்துக் கேட்பு, ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தியூா் அரசு ஆண்கள் பள்ளி 100 ஆண்டுகளைத் தொட்டுள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் கொண்டாட முன்னாள் மாணவா்கள் பங்கேற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்துக்கு, தலைமை ஆசிரியை பானுமதி தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் ஜலாலுதீன், பழனிசாமி, காதா் ஹைதா் கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், புதிய அறக்கட்டளை தொடங்கி முன்னாள் மாணவா்களை உறுப்பினா்களாக சோ்த்தல், கலையரங்கம் கட்டுதல், கட்டடங்களைப் புதுப்பித்தல், விளையாட்டு மைதானத்தில் ஓடுதளம் அமைத்தல், மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில், உடற்கல்வி ஆசிரியா் திருமாவளவன், வழக்குரைஞா்கள் லட்சுமணன், விஜயகுமாா், குருநாதன் உள்பட 30க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com