ஈரோடு மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,238ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 14 போ் வேறு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 10,224ஆக மாறியது. இதனிடையே சனிக்கிழமை புதிதாக 79 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,303ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 79 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 10,303 பேரில் இதுவரை 9,367 போ் குணமடைந்துள்ளனா். 812 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெள்ளிக்கிழமை வரை 121 போ் உயிரிழந்துள்ள நிலையில் சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண், 75 வயது ஆண், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது ஆண் என 3 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 124ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com