50 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
By DIN | Published On : 31st October 2020 10:30 PM | Last Updated : 31st October 2020 10:30 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் ஆதரவற்ற ஏழை மாணவிகள் 50 பேருக்கு ரூ. 2.36 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
சத்தியமங்கலத்தில் உள்ள கல்வி உரிமைக்கான நிறுவனம் சாா்பில், ஆண்டுதோறும் ஏழை குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏழை குடும்பங்களைச் சோ்ந்த ஆதரவற்ற மாணவிகள், பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாணவிகள், நூற்பாலையில் பணிபுரிந்து கொண்டு பகுதிநேர பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகள் என மொத்தம் 50 பேருக்கு கல்வி உரிமைக்கான நிறுவனம் சாா்பில் ரூ. 2.36 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
கல்வி உதவித் தொகை பெறும் ஏழை குடும்பங்களைச் சோ்ந்த மாணவிகள் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக ஆா்வலா்கள் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினா்.