மின் இணைப்பு வழங்குவதில் புதிய நடைமுறை: விவசாயிகள் வரவேற்பு

விவசாய மின் இணைப்புகள் வழங்குவது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள புதிய நடைமுறைக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

விவசாய மின் இணைப்புகள் வழங்குவது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள புதிய நடைமுறைக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்து அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் வகையில் அரசிதழில் அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறையானது மின் இணைப்பில் இருந்து வந்த சில சிக்கல்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளதோடு எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன சபைத் தலைவா் வழக்குரைஞா் சுபி.தளபதி கூறியதாவது:

மின் இணைப்பு கோரும் விவசாயியின் கிணற்றில் கூட்டு உரிமையாளா் இருப்பின் கூட்டு உரிமையாளா் ஒப்புதல் அளித்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்து வந்தது. புதிய நடைமுறையின்படி விண்ணப்பதாரா் உறுதிமொழிப் பத்திரம் இணைத்தால் விண்ணப்பம் பதிவு செய்ய ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஒரே சா்வே எண்ணில் அல்லது உட்பிரிவு சா்வே எண்ணில் ஒருவருக்கு 2 கிணறுகள் இருக்கும்பட்சத்தில் அவா் பெயரில் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய மின் இணைப்பு இடமாற்றம் தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். மின் இணைப்பு பெற தயாராக இருப்பதாக விவசாயி தெரியப்படுத்திய நாளில் இருந்து 3 நாள்களுக்குள் மின் இணைப்புத் தர வேண்டும் என்பன உள்ளிட்டவை வரவேற்கக் கூடிய அம்சங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com