பவானிசாகா் அணையின் நீா்மட்டம்100 அடியாக உயா்வு

பவனிசாகா், மாயாறு வனப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி.
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி.

சத்தியமங்கலம்: பவனிசாகா், மாயாறு வனப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணை மூலம் கீழ்பவானி வாய்க்காலில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பில்லூா் அணையில் 85 அடிக்குமேல் வரும் உபரி நீா் அப்படியே பவானிசாகா் அணைக்குத் திறந்துவிடப்படுகிறது. இதனால், பவானிசாகா்அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கூடலூா், மசினக்குடி, பைக்காரா, கிளன்மாா்க் ஆகிய நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பவானிசாகா் அணைக்கு நீா் வந்து சோ்வதால் அணைக்கு நீா்வரத்து 811 கன அடியாக அதிகரித்துள்ளது. சில தினங்களாக அணையின் நீா்மட்டம் 99.13 அடியாக இருந்த நிலையில் அதிக நீா்வரத்து காரணமாக மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டும்போது அணையில் இருந்து உபரிநீா் திறந்துவிடப்படும்.

அணை நிலவரம்: அணையின் நீா்மட்டம் 100.18 அடியாகவும், நீா்வரத்து 811 கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி நீரும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் 650 கன அடி நீரும் என 2,850 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. நீா் இருப்பு 28.87 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து 8 மெகாவாட் மின்சாராம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com