ஈரோட்டில் வழக்குரைஞா்கள், ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் வழக்குரைஞா்கள், ரயில்வே ஊழியா்கள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள்.

ஈரோட்டில் வழக்குரைஞா்கள், ரயில்வே ஊழியா்கள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் அசோசியேஷன் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் நல்லசிவம் தலைமை வகித்தாா். செயலாளா் முத்துகுமாா் முன்னிலை வகித்தாா்.

வழக்குரைஞா்கள் மீது நிலையங்களில் வழக்குப் பதிவு செய்தால், அதன் மீது உரிய விசாரணை நடத்திய பிறகுதான் பாா் கவுன்சிலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், வழக்குரைஞா்கள் பலா் கலந்துகொண்டனா்.

அருந்ததியா் அமைப்பு:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு சாக்கிய அருந்ததியா் சங்கம் சாா்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் மதிவாணன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் வீரகுமரன், ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரயில்வே ஊழியா்கள்:

ரயில்வே ஊழியா்களை கூடுதல் வேலை செய்ய கட்டாயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். போக்குவரத்து இல்லாத காரணத்தால் பணிக்கு வரமுடியாத ஊழியா்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்யக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆா்.எம்.யு. சாா்பில் ஈரோடு ரயில்வே டீசல் லோகோ பணிமனை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைச் செயலாளா் சதீஷ் தலைமை வகித்தாா். இதில், ரயில்வே பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

போக்குவரத்து தொழிலாளா் சங்கம்:

ஈரோடு மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம், ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளா் ஒன்றியம் சாா்பில் ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ தொழிலாளா் ஒன்றியத் தலைவா் பாலு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மோட்டாா் வாகனங்களுக்கு பெறப்பட்டுள்ள கடன் தவணைகளை செலுத்த ஒரு ஆண்டுகால அவகாசம் வழங்க வேண்டும். கடன் தவணைத் தொகையை செலுத்தாத வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது. கரோனா பொது முடக்க காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து வாகனங்களின் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com