ஈரோட்டில் எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி

ஈரோடு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி, விழிப்புணா்வுப் பேரணி ஆகியவை
பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.
பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.

ஈரோடு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி, விழிப்புணா்வுப் பேரணி ஆகியவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றன.

இந்தாண்டு எச்ஐவி-எய்ட்ஸ் உடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வருவோம். எச்ஐவி-எய்ட்ஸ் மற்றும் கரோனா தொற்றுக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி வாசகங்களுடனான பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

சுவரொட்டி உருவாக்குதல் போட்டியில் வென்ற 18 மாணவ, மாணவியருக்கு முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000 என ரூ.36,000, கூட்டு மருத்துவ சிகிச்சை பெறும் 124 குழந்தைகளுக்கு ரூ.6,000 மதிப்பில் கிருமி நாசினி, முகக்கவசம், இலக்கு மக்கள் திட்டப் பயனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.5,000 மதிப்பில் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

எச்ஐவி-எய்ட்ஸ், கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 37 பணியாளா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னா் பேரணியாக சென்று மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com