கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
g5dam_0512chn_134_3
g5dam_0512chn_134_3

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் 104.50 அடியாக உயா்ந்துள்ளது.

இதனால் அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே உபரிநீராக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படுகிறது. குறிப்பாக பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடிவேரி தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவிபோல் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com