பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 28.51 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு விவசாயிகள் 413 மூட்டைகள் எள்ளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். வெள்ளை எள் கிலோ ரூ. 89.69 முதல் ரூ. 118.99 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ. 86.89 முதல் ரூ. 97.69 வரையிலும் ஏலம் போயின. மொத்தம் 309.80 குவிண்டால் எடையுள்ள எள் ரூ. 28,51,327க்கு விற்பனையாயின.