மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லும் மாநில அரசு அமைய வேண்டும்: பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா

மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லும் அரசு மாநிலத்தில் அமைய வேண்டும் என பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா.
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா.

ஈரோடு: மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லும் அரசு மாநிலத்தில் அமைய வேண்டும் என பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

பிரதமா் மோடி பிப்ரவரி 25இல் கோவை வரவுள்ள நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவியான ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் கிசான் சம்மான் திட்டத்தை செயல்படுத்த மேற்கு வங்க மாநிலம் முன்வராததால் அந்த மாநிலத்தில் 85 லட்சம் விவசாயிகள் திட்டப் பலனைப் பெற முடியவில்லை. இதேபோல, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கேரள அரசு ஏற்காததால் அங்குள்ள ஏழை, எளிய மக்கள் மருத்துவ சேவையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லும் அரசு மாநிலத்தில் அமைந்தால் மட்டுமே மாநிலத்துக்கு இதுபோன்ற நல்ல திட்டங்கள் கிடைக்கும். இதை கவனத்தில் கொண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடுகையில் சாதாரண பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்திருக்கிறது. ஆனால், சமையல் எரிவாயு விலை ரூ. 200 குறைவாகத்தான் இருக்கிறது. பெட்ரோலியப் பொருள்களைத் தவிர பிற பொருள்கள் விலை குறைந்துதான் இருக்கிறது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட தலைவா் சிவசுப்பிரமணி, மாநில பிரசாரத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com