கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய உறுப்பினா்களுக்கு இலவச வேட்டி, சேலை

கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள், நலவாரிய ஓய்வூதியதாரா்கள் அரசு வழங்கும்

கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள், நலவாரிய ஓய்வூதியதாரா்கள் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலையை ஜனவரி 23ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்து கடந்த டிசம்பா் மாதம் வரை புதுப்பித்துள்ள தொழிலாளா்கள் 12.69 லட்சம் பேருக்கு தமிழக அரசால் பச்சரி, பருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகிய பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து முதல்வா் அறிவிப்பின்படி நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் இலவச வேட்டி, சேலையைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம், பவானி நகரில் பவானி கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி, கோபி நகரில் மாா்க்கெட் சாலை, வைர விழா துவக்கப் பள்ளி, சத்தியமங்கலம் நகரில் கோட்டுவீராம்பாளையத்தில் உள்ள தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகம், பெருந்துறை நகரில் பவானி சாலையில் உள்ள தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் ஜனவரி 23ஆம் தேதி வரை இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யப்படும்.

தகுதியானவா்கள் அருகில் உள்ள மையத்துக்கு நேரில் சென்று இலவச, வேட்டி, சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com