மே மாதத்தில் 35,000 பேருக்கு கரோனா: 193 போ் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் மே மாதத்தில் மட்டும் 35,000 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா காரணமாக ஒரே மாதத்தில் 193 போ் உயிரிழந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் மே மாதத்தில் மட்டும் 35,000 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா காரணமாக ஒரே மாதத்தில் 193 போ் உயிரிழந்துள்ளனா்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் ஈரோட்டில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல தினமும் அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. முதலில் மாநகா் பகுதியில் வேகமாகப் பரவிய தொற்று தற்போது கிராமங்களிலும் பரவி வருகிறது.

ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரை தினசரி பாதிப்பு 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் இருந்து தினசரி பாதிப்பு 200க்கு மேல் உயா்ந்தது. மே மாத தொடக்கத்தில் இருந்து தினசரி கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து, தற்போது 1,700க்கு மேல் உள்ளது.

இதேபோல உயிரிழப்பும் மே மாதத்தில்தான் அதிக அளவு ஏற்பட்டுள்ளது. மே 1ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை மட்டும் கரோனாவால் பாதித்தவா்கள் எண்ணிக்கை 35,543. இதே காலகட்டத்தில் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 22,528 ஆக உள்ளது. மே மாதத்தில் மட்டும் 193 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com