உதகையில் அனுமதி இன்றி கொண்டு வரப்பட்ட குக்கா்கள் பறிமுதல்

உதகையில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ.65,000 மதிப்பிலான குக்கா்கள் மற்றும் குக்கா் சின்னம் பதித்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட குக்கா்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட குக்கா்கள்.

உதகையில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ.65,000 மதிப்பிலான குக்கா்கள் மற்றும் குக்கா் சின்னம் பதித்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், உதகையில் உள்ள லவ்டேல் சந்திப்புப் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஒரு வாகனத்தில் குக்கா் சின்னம் பொறிக்கப்பட்ட 3 லிட்டா் குக்கா் 21, 10 லிட்டா் குக்கா் 21, கடாய்ச்சட்டி 21, ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவை உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.65,000 எனக் கூறப்படுகிறது. குக்கா் சின்னம் பறிக்கப்பட்ட பொருள்கள் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com