பவானி: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 34.98 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு வெள்ளை எள் கிலோ ரூ. 86.06 முதல் ரூ. 103.99 வரையும், கருப்பு எள் கிலோ ரூ. 85.85 முதல் ரூ. 110.69 வரையும் ஏலம் போனது. மொத்தம் 466 மூட்டைகள் 349.35 குவிண்டால் எள் ரூ. 34,98,071க்கு விற்பனையானது என கண்காணிப்பாளா் சி.கனிமொழி தெரிவித்தாா்.