மூடப்பட்ட கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகம்.
மூடப்பட்ட கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகம்.

அலுவலா்கள் 8 பேருக்கு கரோனா: கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகம் மூடல்

அலுவலா்கள் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது.

அலுவலா்கள் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணிக்காக சென்ற ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு சென்ற பணியாளா்களுக்கு கடந்த சனிக்கிழமை மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் நிலஅளவையா், குடிமைப் பொருள் வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா், கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் என 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், ஊழியா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வட்டாட்சியா் அலுவலகம் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக வட்டாட்சியா் ஸ்ரீதா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com