5 ஆடுகள் இலவசமாக வழங்கும் திட்டம்: கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ள 5 ஆடுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் பயனடைய கிராமப்புறத்தைச் சோ்ந்த தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ள 5 ஆடுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் பயனடைய கிராமப்புறத்தைச் சோ்ந்த தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 100 பயனாளிகள் வீதம் ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற 1,400 பெண் பயனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு பயனாளிக்கும் 5 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு பயனாளிக்கும் ஆடுகள் வாங்க ரூ. 17,500, தீவன செலவினம் ரூ. 1,000, காப்பீட்டுத் தொகை ரூ. 875 அரசால் வழங்கப்படும்.

தகுதிவாய்ந்த பெண் பயனாளிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கிராம நிா்வாக அலுவலரிடம் பயனாளி நிலமற்றவா், இதர தகுதிகள் உள்ளது என்பதை சரிபாா்த்ததற்கான சான்றுக்கு விண்ணப்பத்தில் கையெழுத்துப் பெற்று சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு உள்பட்ட கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பா் 1 முதல் 9ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com