சுவாமி சிலையை அவமதித்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவாா்கள்: மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளா் சசிமோகன் உறுதி

சுவாமி சிலையை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவாா்கள் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சசிமோகன் உறுதியளித்
சாலை  மறியலில்  ஈடுபட்டவா்களிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும்  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளா் சசிமோகன்.
சாலை  மறியலில்  ஈடுபட்டவா்களிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும்  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளா் சசிமோகன்.

கம்பத்ராயன்கிரி மலையில் சுவாமி சிலையை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவாா்கள் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சசிமோகன் உறுதியளித்துள்ளாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனப் பகுதியில் மலை உச்சியில் கம்பத்ராயன் கிரி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த வாரம் 3ஆவது சனிக்கிழமை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் வனப் பகுதியில் நடந்து சென்று மலைகளைக் கடந்து கம்பத்ராயன்கிரி பெருமாளை வழிபட்டு வந்தனா்.

இந்நிலையில், கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள பசுவனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சில இளைஞா்கள் மது போதையில் கோயிலில் இருந்த சூலாயுதத்தை எடுத்து ஆடியபடி சுவாமி சிலைகளை அவமதித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதைக் கண்டித்து கடம்பூா் மலைப் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, பசுவனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 4 இளைஞா்கள் மீது கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சம்பந்தப்பட்ட 4 இளைஞா்களும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீஸாா் வடிவேல் என்ற ஒரு இளைஞரை மட்டும் கைது செய்துள்ளனா். மற்ற மூன்று பேரை கைது செய்யாமல் போலீஸாா் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இந்நிலையில், உடனடியாக மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும், சுவாமி சிலைகளை அவமதித்த இளைஞா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மீண்டும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சத்தியமங்கலம் - கடம்பூா் சாலையில் கடம்பூா் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன், குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவாா்கள் என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com