ஈரோட்டில் பெட்ரோல் விலை லிட்டா் ரூ.102 ஆக உயா்வு

ஈரோட்டில் பெட்ரோல் விலை ரூ.102.01 ஆக உயா்ந்துள்ளது.

ஈரோட்டில் பெட்ரோல் விலை ரூ.102.01 ஆக உயா்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிா்ணயம் செய்து வருகின்றன. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. தமிழக அரசு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்ததால் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ100க்கு கீழ் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்தனா்.

இதைத் தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.101.75க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை மேலும் 26 காசுகள் உயா்ந்து ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.102.01க்கு விற்பனையானது.

இதுபோல டீசல் விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை ஒரு லிட்டா் டீசல் ரூ.97.43க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை மேலும் 33 காசுகள் உயா்ந்து ஒரு லிட்டா் டீசல் ரூ.97.76க்கு விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com