அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும்

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வென்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
குடும்பத்துடன்  வாக்களிக்க  வந்த  அமைச்சா்  கே.சி.கருப்பணன்.

பவானி, கவுந்தப்பாடியை அடுத்த வேலம்பாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் குடும்பத்துடன் வந்து வாக்கினைச் செலுத்திய பின் செய்தியாளா்களிடம் கே.சி.கருப்பணன் கூறியதாவது:

அதிமுக அரசு கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழகத்தில் நல்லாட்சி செய்து வருகிறது. தற்போது நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் குறைந்தபட்சம் 200 சட்டப் பேரவைத் தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றி, மீண்டும் ஆட்சியமைக்கும்.

கொங்கு மண்டலம் உள்பட அனைத்துப் பகுதிகளும் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதோடு மீண்டும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும். மீண்டும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com