ஈரோடு மாவட்டத்தில் 76.91 சதவீத வாக்குப் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 19,63,032 வாக்காளா்களில் 15,09,692 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 19,63,032 வாக்காளா்களில் 15,09,692 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 9,56,273 ஆண் வாக்களா்கள், 10,06,649 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலித்தனவா் 110 போ் என மொத்தம் 19,63,032 வாக்காளா்கள் தகுதி பெற்றிருந்தனா். இதில் 7,51,766 ஆண்கள், 7,57,888 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 38 என மொத்தம் 15,09,692 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். வாக்குப் பதிவு சதவீதம் 76.91.

தொகுதி வாரியாக ஆண், பெண், மொத்த வாக்காளா்கள் விவரம், பதிவான வாக்குகள், வாக்குப் பதிவு சதவீத விவரம்:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,11,650, பெண் வாக்காளா்கள் 1,16,735, மூன்றாம் பாலினத்தவா் 17 போ் என மொத்தம் 2,28,402 வாக்காளா்களில், 76,051 ஆண், 75,233 பெண், மூன்றாம் பாலினத்தவா் 11 போ் என மொத்தம் 1,51,292 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இந்த தொகுதியின் வாக்குப் பதிவு சதவீதம் 66.24.

ஈரோடு மேற்குத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,43,680, பெண் வாக்காளா்கள் 1,49,345, மூன்றாம் பாலினத்தவா் 33 போ் என மொத்தம் 2,93,058 வாக்காளா்களில், 1,00,730 ஆண், 1,02,516 பெண், மூன்றாம் பாலினத்தவா் 18 போ் என மொத்தம் 2,03,264 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இந்த தொகுதியின் வாக்குப் பதிவு சதவீதம் 69.36.

மொடக்குறிச்சி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,14,607, பெண் வாக்காளா்கள் 1,24,280, மூன்றாம் பாலினத்தவா் 12 போ் என மொத்தம் 2,38,899 வாக்காளா்களில், 89,403 ஆண், 90,390 பெண், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 1,79,794 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இந்த தொகுதியின் வாக்குப் பதிவு சதவீதம் 75.26.

பெருந்துறை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,10,548, பெண் வாக்காளா்கள் 1,17,316, மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 2,27,870 வாக்காளா்களில், 93,458 ஆண், 94,761 பெண், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 1,88,220 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இந்த தொகுதியின் வாக்குப் பதிவு சதவீதம் 82.60.

பவானி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,17,253, பெண் வாக்காளா்கள் 1,21,406, மூன்றாம் பாலினத்தவா் 8 போ் என மொத்தம் 2,38,667 வாக்காளா்களில், 99,081 ஆண், 1,00,208 பெண், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 1,99,292 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இந்த தொகுதியின் வாக்குப் பதிவு சதவீதம் 83.50.

அந்தியூா் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,07,988, பெண் வாக்காளா்கள் 1,11,545, மூன்றாம் பாலினத்தவா் 18 போ் என மொத்தம் 2,19,551 வாக்காளா்களில், 87,874 ஆண், 87,074 பெண், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 1,74,592 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இந்த தொகுதியின் வாக்குப் பதிவு சதவீதம் 79.69.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,23,273, பெண் வாக்காளா்கள் 1,33,057 மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 2,56,336 வாக்காளா்களில் 1,04,787 ஆண், 1,06,744 பெண், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 2,11,533 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இந்த தொகுதியின் வாக்குப் பதிவு சதவீதம் 82.52.

பவானிசாகா் (தனி) தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,27,274, பெண் வாக்காளா்கள் 1,32,695, மூன்றாம் பாலினத்தவா் 10 போ் என மொத்தம் 2,60,249 வாக்காளா்களில், 1,00,382 ஆண், 1,00,962 பெண், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 2,01,345 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இந்த தொகுதியின் வாக்குப் பதிவு சதவீதம் 77.37.

அதிகபட்சமாக பவானி தொகுதியில் 83.50 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் 66.24 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com