தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தீ விபத்தைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாவட்ட தீயணைப்பு, மீட்புக் குழுவின் சாா்பில் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தீ விபத்தைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாவட்ட தீயணைப்பு, மீட்புக் குழுவின் சாா்பில் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலா் புளுகாண்டி தலைமை வகித்தாா். உதவி தீயணைப்பு அலுவலா் வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். இதில் அரசு, தனியாா் மருத்துவமனைகளைச் சோ்ந்த மருத்துவமனை நிா்வாகிகள், ஊழியா்கள் 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலா் புளுகாண்டி கூறியதாவது:

மருத்துவமனைகளில் மிகவும் அபாயகரமான விபத்து என்றால் தீ விபத்துதான். இரண்டு தளங்களுக்குமேல் உள்ள மருத்துவமனைகளில் தானியங்கி தீயணைப்பு கருவிகள், தீத்தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்த உபகரணங்களை வைத்திருந்தால் மட்டும் போதாது. இதைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தை தீத்தடுப்பான் கருவியைக் கொண்டு அணைக்க வேண்டும். தண்ணீரைக் கொண்டு அணைத்தால் மேலும் மின் கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்படும். மருத்துவமனைகளில் ஜெனரேட்டரில் ஆயில் கசிவால் ஏற்படும் தீயை எக்காரணம் கொண்டும் தண்ணீரைப் பயன்படுத்தி அணைக்கக் கூடாது. அப்படி அணைத்தால் மேலும் தீ பரவும். இதனால் தீ தடுப்பான் கருவியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அந்த கருவியை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து தீ தடுப்பான் கருவியை உபயோகப்படுத்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில், ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலா் மயில்ராஜ், தீயணைப்பு அலுவலா்கள், வீரா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com