சத்தியமங்கலம் வாரச் சந்தையில் பழங்கள் விற்பனை

சித்திரை கனியை முன்னிட்டு சத்தியமங்கலம் வாரச் சந்தையில் பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
சத்தியமங்கலம் வாரச் சந்தையில் குவித்து  வைக்கப்பட்ட பழங்கள்.
சத்தியமங்கலம் வாரச் சந்தையில் குவித்து  வைக்கப்பட்ட பழங்கள்.

சித்திரை கனியை முன்னிட்டு சத்தியமங்கலம் வாரச் சந்தையில் பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தினசரி மாா்க்கெட்டில் உள்ள பழக்கடைகள் மற்றும் பழமுதிா் நிலையங்களில் பழங்கள் வாங்க மக்கள் குவிந்தனா். சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் விலை குறைவாக ஒரு சிறிய கூடை ரூ.50, ரூ.100 என பழங்களைத் தரம் பிரித்து விற்பனை செய்கின்றனா். ஆரஞ்சு பழம் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து கிலோ ரூ.140க்கு விற்பனையானது. ஆப்பிள் கிலோ ரூ. 200, மாதுளை ரூ.220, மாம்பழம் ரூ.80, திராட்சி ரூ.100, பலாபழம் ஒன்று ரூ.300 என விற்பனையானது. அனைத்து வகையான பழங்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பழ வகைகளை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக வியாபாரிகள் கூறுகின்றனா். இதனால் 5 வகையான பழங்கள் கொண்ட சிறு கூடை ரூ.100க்கு விற்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com