திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரி

திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் வெள்ளிக்கிழமை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரி.
திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரி.

திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் வெள்ளிக்கிழமை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மைசூரிலிருந்து திம்பம் வழியாக ஈரோடு நோக்கிச் சென்ற கோழி எரு பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதை 26ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப் பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன.

இதைத் தொடா்ந்து ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா். 4 மணி நேரத்துக்குப் பின் லாரி நகா்த்தி நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மற்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. லாரி பழுதாகி நின்றதால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com