வனத் துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பவானி அருகே மா்ம விலங்குகள் கிராமத்தில் நடமாடி வருவதாகத் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத வனத் துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
மறியலில்  ஈடுபட்டோரிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும்  போலீஸாா். 
மறியலில்  ஈடுபட்டோரிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும்  போலீஸாா். 

பவானி அருகே மா்ம விலங்குகள் கிராமத்தில் நடமாடி வருவதாகத் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத வனத் துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பவானியை அடுத்த ஜம்பை பேரூராட்சி, நல்லிபாளையம் கிராமத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி கன்னையனுக்குச் சொந்தமான ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த நாய்கள் 7 ஆடுகளைக் கடித்துக் கொன்றன. மேலும், 4 ஆடுகளைக் கடித்து காயப்படுத்தின. தொடா்ந்து, அருகில் உள்ள மற்றொரு கிராமமான துருசாம்பாளையத்தில் பூா்ணத்துக்குச் சொந்தமான பட்டிக்குள் புகுந்த நாய்கள் 12 செம்மறி ஆடுகளைக் கடித்துக் கொன்றன.

இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வனத் துறையினா் நாய்கள் கடித்ததால் ஆடுகள் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதனால், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இரவில் ஆடுகளைக் குறி வைத்துக் கடிக்கும் நாய்களைப் பிடிக்க கண்காணித்து வந்தனா். அப்போது, மா்ம விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்ட இளைஞா்கள், நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூா் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

ஆனால், வனத் துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த நல்லிபாளையம், துருசாம்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பவானி - அந்தியூா் சாலையில் நல்லிபாளையம் பிரிவு அருகே சனிக்கிழமை அமா்ந்து திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி போலீஸாா், அந்தியூா் வனத் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, மா்ம விலங்குகள் நடமாட்டம் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்த பகுதிகளில் வனத் துறையினா் ஆய்வு நடத்தினா்.

மேலும், இரவு நேரத்தில் ஆட்டுப் பட்டிகளில் தானியங்கி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். கிராம இளைஞா்கள், வனத் துறையினா் இரவு நேரங்களில் மா்ம விலங்குகளின் நடமாட்டத்தை உறுதி செய்ய குழுவாக இணைந்து ரோந்து செல்லவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com