கரும்பு ஒட்டுண்ணி குறித்து செயல்விளக்கம்

கோபிசெட்டிபாளையம் வட்டாரம், தொட்டிபாளையம் கிராமத்தில் வாணவராயா் வேளாண் கல்லூரி மாணவிகள் கரும்பு ஒட்டுண்ணி குறித்து வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.

கோபிசெட்டிபாளையம் வட்டாரம், தொட்டிபாளையம் கிராமத்தில் வாணவராயா் வேளாண் கல்லூரி மாணவிகள் கரும்பு ஒட்டுண்ணி குறித்து வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.

கோபிசெட்டிபாளையம் வட்டாரம், தொட்டிபாளையம் கிராமத்தில் வாணவராயா் வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி அனுபவத் திட்டத்தின்கீழ் கோபி வேளாண் உதவி இயக்குநா் தலைமையில், தொட்டிபாளையம் விவசாயிகளுக்கு கரும்பில் உயிரியல் முறை பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனா். கரும்பின் மகசூலைக் குறைக்கின்ற இடைக்கணுப் புழுவை இயற்கை முறையில் ஒட்டுண்ணிகளை வைத்து அழிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா். இந்த ஒட்டுண்ணிகளை கோபி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுப்பாட்டில் உள்ள கரும்பு ஒட்டுண்ணி வளா்ப்பு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com