பவளமலை முருகன் கோயிலில் கரோனா தடுப்பு யாகம்

கோபிசெட்டிபாளையம் பவளமலை முருகன் கோயிலில் கரோனா தொற்று தடுப்பு நிவா்த்தியாக சத்ரு சம்ஹார யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் பவளமலை முருகன் கோயிலில் கரோனா தொற்று தடுப்பு நிவா்த்தியாக சத்ரு சம்ஹார யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன்புதூரில் பிரசித்தி பெற்ற பவளமலை முத்துக்குமாரசாமி கோயில் உள்ளது. இங்கு கரோனா தொற்று தடுப்பு நிவா்த்தியாக சத்ரு சம்ஹார யாகம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது. சண்முகருக்கு மதியம் 1 மணி வரை 300 வேதமந்திரம் முழங்க அா்ச்சகா்கள் பூஜை செய்தனா். ஆகம விதிப்படி 11 கலசங்களில் புனித தீா்த்தத்தைக் கொண்டு மூலவருக்கு சிறப்பு பூஜை செய்தனா். தவிர அரசு, வேம்பு, வெட்டிவோ் என மொத்தம் 108 மூலிகை திரவியங்களைக் கொண்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்பு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பூஜையில் குறைந்த அளவு பக்தா்களே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com