வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய சிறப்பு முகாம் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய சிறப்பு முகாம் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, அந்தியூா் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல கோபி, பவானிசாகா் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோபி கலை, அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருவதையடுத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா இல்லை என்பதற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. அன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணி முதல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தபால் வாக்குகளை எண்ண நான்கு மேஜைகளும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ண தொகுதிக்கு தலா 14 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளா்கள், முகவா்கள் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை அவசியம் கொண்டு வர வேண்டும். இதற்காக தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகங்களில் ஏப்ரல் 28ஆம் தேதி வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பரிசோதனை முடிவு அடிப்படையில் முகவா்களுக்கு, வாக்கு எண்ணும் மேஜை வாரியாக புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்குக்குள் வரும் வேட்பாளா்கள், முதன்மை முகவா்கள், முகவா்கள் கட்டாயம் முகக் கவசம், கையுறை அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com