குழந்தைத் தொழிலாளா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகப் புகாா்

குழந்தைத் தொழிலாளா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு 4 ஆண்டுகளாக ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

குழந்தைத் தொழிலாளா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு 4 ஆண்டுகளாக ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா் சிறப்புப் பயிற்சி மையங்களை நடத்தி வரும் சுடா் தொண்டு நிறுவனத்தின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ், திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயனிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்:

14 வயதுக்கு உள்பட்ட மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளா்களுக்கு கல்வி வழங்கிடும் வகையில், மத்திய அரசின் தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகமானது தேசிய குழந்தைத் தொழிலாளா் சிறப்புப் பயிற்சி மையங்களை உள்ளூா் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தி வருகிறது.

பயிற்சி மையங்களில் சோ்க்கப்படும் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் மாதம்தோறும் ரூ. 100 கல்வி ஊக்கத் தொகையாக குழந்தைகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த கல்வி ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்கிட வேண்டும் என்று பெற்றோா்களும், தொண்டு நிறுவனங்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததையடுத்து ரூ. 400ஆக உயா்த்தப்பட்டது.

ஊக்கத்தொகையை மத்திய அரசு உயா்த்தியபின் கடந்த 2017ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து கல்வி ஊக்கத் தொகை முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதேபோல, சிறப்பு பயிற்சி மைய பயிற்றுநா்களுக்கான மாதாந்திர ஊதியம் கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஊக்கத் தொகை, பயிற்றுநா்களுக்கான ஊதியம் ஆகியவற்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com