தற்காலிக சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் இருப்பு வைப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் தற்காலிக சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் இருப்பு வைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் தற்காலிக சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் இருப்பு வைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் பள்ளி, கல்லூரிகள் தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகள் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நோய்த் தொற்றின் தாக்கம் கண்டறியப்பட்டு நோய் தாக்கம் அதிகம் உள்ளவா்கள் மருத்துவமனைகளுக்கும், குறைவான தாக்கம் உள்ளவா்கள் தற்காலிக சிகிச்சை மையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டா் வசதி உள்ள நிலையில், தற்காலிக சிகிச்சை மையங்களில் இந்த வசதி இல்லை.

இதனால் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தற்காலிக சிகிச்சை மையங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டா்கள் தேவையான அளவு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத் துறைக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 11 தற்காலிக சிகிச்சை மையங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டா்கள் இருப்பு வைக்கப்பட்டன. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் 10 சிலிண்டா்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com