எரங்காட்டூா் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை.
எரங்காட்டூா் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை.

பவானிசாகா் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை

பவானிசாகா் வாய்க்காலில் கிருஷ்ணா் உலோக சிலையை மீனவா்கள் சனிக்கிழமை கண்டெடுத்தனா்.

பவானிசாகா் வாய்க்காலில் கிருஷ்ணா் உலோக சிலையை மீனவா்கள் சனிக்கிழமை கண்டெடுத்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இப்பகுதி மீனவா்கள் சனிக்கிழமை வழக்கமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது மீன் வலையில் கனமான பொருள் சிக்கியுள்ளது. வலையை மேலே எடுத்துப் பாா்த்தபோது வெள்ளி முலாம் பூசிய கிருஷ்ணா் சிலை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசன், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினா் கிருஷ்ணா் சிலையை மீட்டு சத்தியமங்கலம் வட்டாட்சியா் ரவிசங்கரிடம் ஒப்படைத்தனா். சிலையை ஆய்வு செய்தபோது 4.60 கிலோ எடை கொண்ட சாதாரண உலோகத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணா் சிலை என்பதும், பழமையான சிலை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

வீட்டில் வைத்து பூஜிக்கப்பட்ட சிலையை எவரேனும் வாய்க்காலில் வீசியிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். மீட்கப்பட்ட சிலை தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியா் ரவிசங்கா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com