உழவா் சந்தைகள் இன்று செயல்படும்

முழு பொது முடக்கம் அமலில் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு பொது முடக்கம் அமலில் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர பொது முடக்கம், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு நேர பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி வரையும், பகல் 12 முதல் 3 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரையும் பாா்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் காய்கறி, மீன் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் குறித்த நேரத்தில் மட்டும் செயல்படும். ஈரோடு சம்பத் நகா், பெரியாா் நகா், குமலன்குட்டை பள்ளி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் போன்ற இடங்களில் உள்ள உழவா் சந்தைகள் வழக்கம்போல் காலை 5 முதல் 10 மணி வரை மட்டும் செயல்படும்.

அங்கும் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி, பழங்கள் போன்றவை மட்டும் விற்க அனுமதிக்கப்படும். உணவுப் பொருள்கள், பிற பொருள்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை.

பேருந்துகள் முற்றிலும் இயங்காது. குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் இயங்குவதால் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ, கால் டாக்ஸிகள் மட்டும் இயங்கும். பிற பகுதிகளில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு மட்டும் ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காவல், சுகாதாரத் துறையினா், உள்ளாட்சி அமைப்பினா் அந்தந்தப் பகுதிகளில் தணிக்கையில் ஈடுபடுவா். தேவையில்லாமல் சுற்றித் திரிபவா்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வழக்குப் பதிவு செய்யப்படும். சாலை ஓரங்களில் வசிப்பவா்கள் மட்டும் அம்மா உணவகம் சென்று வர அனுமதிக்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com