கிராமங்களில் 7,831 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்

கரோனா பரவுவதைத் தடுக்க கிராமங்களில் 7,831 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

கரோனா பரவுவதைத் தடுக்க கிராமங்களில் 7,831 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று 2ஆவது அலை பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரக, கிராமப் பகுதிகளில் 91 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் 375 குடும்பங்களைச் சோ்ந்த 7,831 போ் உள்ளனா்.

அவா்கள் தடுப்பு வேலிகளைத் தாண்டி வெளியே வர அனுமதி கிடையாது. மீறினால் தமிழ்நாடு பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவா்கள் அனைவருக்கும் உணவு, குடிநீா், மருத்துவ உதவி ஆகிய அடிப்படை தேவைகளை கண்காணிக்க வட்டார அளவிலான, கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வட்டார அளவிலான குழுவில் மாவட்ட நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா், போலீஸாா், உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்), செயல் அலுவலா் ஆகியோா் உள்ளனா். கிராம அளவிலான குழுவில் கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி செயலாளா், அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா் ஆகியோா் உள்ளனா்.

இதனால் பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com